சகலத்தையும் புதிதாக்குவேன்
sagalathaiyum pudhidhaakkuven
சகலத்தையும் புதிதாக்குவேன் புதிதாக்குவேன் மகனே (மகளே) கடந்ததையும் நடந்ததையும் இனிமேல் நினைக்காதே
1. கண்ணீரும் கலக்கமும் இனி இல்லை வருத்தமும் வருமையும் இனி இல்லை முந்தின காரியும் கடந்திட்டதே எல்லாம் இனிமேல் புதிதாகுமே
2. வனந்திரத்தில் வழிகளையும் அவாந்திர வெளியில் ஆற்றையும் உண்டாக்கினவர் உன்னோடு உண்டு உனக்கு வழியே திறந்திடுவேன்
3. வெண்கல கதவை உடைத்திடுவேன் இருப்பு தாழ்ப்பாளை முறித்திடுவேன் மறைவான மன்னாவை தந்திடுவேன் மகிமையாய் உன்னை நடத்திடுவேன்
4. பார்வோனின் சேனையை அழித்தவர் சத்துருவின் சூழ்ச்சியை அழித்திடுவார் இன்று காணும் எகிப்தியனை என்றுமே நீ காண்பதில்லை