சகல வளமும் பெற்று
sagala valamum petru
சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம்
இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள்
1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோ வற்றாத நீரூற்றல்லவோ
கர்த்தர் உங்களை நித்தமும் நடத்தி நன்மையால் திருப்தியாக்குவார் நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார்
2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவே சாதனைகள் புரியவேண்டுமே
ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய் வாழ்வாங்கு வாழ வேண்டுமே நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே
3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும் குலக்கொழுந்து நீவிரல்லவோ ஜீவிதம் செய்யும் காலம் முழுவதும் நன்மைகள் உம்மைத்தொடருமே என்றென்றும் நன்மைகள் உம்மைத்தொடருமே