சதா காலமும் உண்மையுள்ளவர்
sadhaa kaalamum unmaiyullavar
சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே - 2
எல் ஹேனா ஹேமான் நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையை காப்பவரே - 2
அந்நியராக வாழ்ந்த என்னை புத்திரராக மாற்றி விட்டீர் - 2 ஆபிரகாமுக்கு சொன்னவற்றை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் - 2
காண்பித்த தேசத்தை கொடுத்து விட்டீர் நட்டாத விருட்சத்தை ருசிக்க செய்தீர் இலவசமான ஆளுகையை இயேசு கிறிஸ்துவில் கொடுத்து விட்டீர் - 2