சாரோனின் ரோஜாவை
saaronin rojaavai
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு - 2
1.உருவங்கள் கலையாமல் சாயலும் சிதையாமல் - 2 என்னை பாதுகாத்த அழகின் அழகே என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே - 2
என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகம் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே 2
2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன் நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2 உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல - 2
என்னை மீட்க வந்தவரே என் உயிரில் கலந்தவரே பரலோகில் என்னை சேர்க்க பாவியை தேடி வந்தவரே - 2