சாரோனின் ரோஜாவாம்
saaronin rojaavaam
சாரோனின் ரோஜாவாம் என் திவ்விய நேசரே என் சொந்தம் நீர் தானல்லவோ! உம்மை போல் நேசிக்க யாருண்டு பூவினில் நன்றியால் நிறைந்து உள்ள பாடுவேன்!
1. வனாந்தரத்திலே உன் வழியாய் வந்தீர் வான் திறந்து ஆசீர் நல்கினீரே பின்னானவைகளை மறந்து முன்னானவைகளைத் தொடர்வேன்! - சாரோனின்
2, தீங்கு நாளில் என்னைக் கூடாரத்தில் மறைத்து கிருபையாய் காத்தீரன்றோ கன்மலையே உம்மில் மறைந்து வன்செயலை என்றும் கூறுவேன்! - சாரோனின்
3. அக்கினி சோதனை வந்த வேளை சிநேகத்தால் தழல் என்னில் எரியச் செய்தீர் ரோகத்தால் வாடிய வேளையில் வார்த்தையால் சுகமதை ஈந்தீரே! - சாரோனின்
4. பரிசுத்தாவியால் நிறைத்தென்னையே பரிசுத்த ஆலயமாக்கினீரே பரிசுத்தர் உம்மை போல ஜீவிக்க பரிசுத்தர் உபதேசம் நல்கினீர்! - சாரோனின்
5. குற்றம் குறை யாவும் போக்கிடுவீர் முற்றும் என்னை மாற்றும் உம் சாயலாய் விண்ணில் நீர் வெளிப்படும் வேளையில் முக முகமாய் உம்மைக் காணுவேன்!- சாரோனின்