சாதிக்கலாம் நீ வா
saadhikkalaam nee vaa
சாதிக்கலாம் நீ வா நண்பனே - (2) உன்னை பெலப்படுத்தும் நேசர் இயேசுவாலே - (2) நீயும் சாதனை செய்திடலாம்
காலையில் மலர்ந்து மாலையில் மறையும் மலர்கள் மணம் வீ்சுதே உறவுகள் இல்லாத பறவைகள் கூட மகிழ்வுடன் வாழ்கின்றதே - (2)
உன்னால் ஏன் முடியாது உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா- (2) எல்லாம் செய்ய பெலன் உண்டு உன் ஆண்டவர் இயேசுவினால் - (2)
தேவனின் சொல்லாலே உலகினில் உதிக்கும் ஆதவன் ஒளி வீசுதே வானத்தில் மின்னிடும் விண்மீன்கள் கூட தினமும் ஒளிர்கின்றதே - (2)
உன்னால் ஏன் முடியாது உள்ளத்தில் சிந்தனை செய் நண்பா - (2) எல்லாம் செய்ய பெலனுண்டு உன் ஆண்டவர் இயேசுவினால்- (2)