ரொம்ப ரொம்ப நல்லவரு
romba romba nallavaru
ரொம்ப ரொம்ப நல்லவரு எங்கள் இயேசு நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு
எங்கள் இயேசு நல்ல இயேசு நம்பி வந்த ஜனத்துக்கு நல்ல இயேசு
கண்ணீரை துடைத்து கவலையை போக்குவார் அருகிலே வந்து ஆறுதல் தருவார்
காயப்பட்ட இதயத்தை கரம் நீட்டி தொட்டு கலங்காதே என்று அணைத்திட வருவார்
சத்திய வெளிச்சம் அவர் தான் அன்றோ உம் துக்க நாட்கள் முடிந்தனவன்றோ
வெள்ளம் போல் சாத்தான் வந்திடும் போது வெற்றிக்கொடி ஏந்தும் வல்லவர் அவரே
முழுமனதோடு அவரிடம் ஓடி வா மன்னிப்பு வழங்கும் வள்ளலை தேடி வா
பணம் பொருளின்றி இலவசமாக அவரன்பை சுவைத்திட வேகமாய் வாங்க