ரட்சகா உம்மைப் பின் செல்வேன்
ratsagaa ummaip pin selven
1. ரட்சகா உம்மைப் பின் செல்வேன் எது என் பங்கானாலும் நீர் எவ்விடமே சென்றாலும் கர்த்தா உம்மைப் பின் செல்வேன்.
ரத்தம் சந்தினீர் எனக்காய் என்றும் உம்மை பின் செல்வேன் எவர் விட்டோடினும் உம்மை உம் கிருபையால் பின் செல்வேன்.
2. முள்ளும் கரடும் பாதையில் முன் வந்து மறைத்தாலும் நீர் நடந்த பாதை தானே நாடியே நான் பின் செல்வேன்.
3. கஷ்டங்கள் என்னைச் சூழ்ந்தாலும் கடின சோதனையில் உம் சோதனையை நினைத்து களிப்போடு பின் செல்வேன்.
4. துன்பத்தினூடே நடத்தி ஏழை என்னை யாக்கிலும் ஏழை நீரும் ஆனீரல்லோ எண்ணி உம்மைப் பின் செல்வேன்.
5. யோர்தான் பேர் அலை வீசியே ஓராழம் அமிழ்த்தினும் அலைமேல் நடந்தவரே அசையாது பின் செல்வேன்.