ரட்சக ரொருவரன்பு பேரன்பென்றும்
ratsaga roruvaranbu peranbendrum
1. ரட்சக ரொருவரன்பு பேரன்பென்றும் கேள்விப்பட்டேன் ஆனால் மெய்தான் ஜீவன் விட்டு என்னை மீட்கக் குருசில் மாண்டார்.
ஆம்! (3) என்னை நேசித்ததாலேதானே? ஆம்! (3) என் மேல் க்ருபை கூருகிறார்.
2. அவர் பாடும் மரணமும் அதிகமாயும் கேள்விப்பட்டேன் ஆனால் மெய்தான் இவை எல்லாம் மா பாவி எனக்காகவே தான்.
3. இந்த யேசு அடியார்க்கு ஓர் ராஜ்யமிருக்கிறதாம். ஆனால் பாவியாம் எனக்கு அங்கோர் பங்கு இருக்கிறதோ?
4. நாதா நீர் விண்ணப்பத்தை அன்பாகவே அங்கீகரித்து உமதாவியாலிதெல்லாம் என் பங்காமென்று காட்டிடுமே.