ராஜ்யத்தின் பங்காளி ஏன் தூங்குகிறாய்
raajyathin pangaali en thoongugiraay
1. ராஜ்யத்தின் பங்காளி ஏன் தூங்குகிறாய்? உன் வீடு சமீபம் ஏன் தூங்குகிறாய்? விழித்தெழும்பி உன் ஆயுதம் தரி அச்சணத்திற்காய்த் துரிதப்படு.
2. ராஜ்யத்தின் பங்காளியே ஏன் தாமதம்? பரிசைப் பெற ஏன் தயங்குறார்? எழும்பு மீட்பரின் வருகையைப் பார் அவரைச் சந்திக்க ஆயத்தமா?
3. தயங்காதே உலக வீண் காட்சியால் அம் மகிமை யாவும் மறைந்து போம் சத்துருவின் பலத்த கட்டை உடை ராஜ்யத்தின் பங்காளியே மீண்டுவா.
4. உன் தலையை உயர்த்திக் கருத்தாய்ப் பார் மகிமை ராஜாவின் வருகையை அதோ மலையில் தோன்றும் ஒளியைப் பார் ராஜ்யத்தின் பங்காளியே கெம்பீரி.