ராஜன் பாலன் பிறந்தனரே
raajan paalan pirandhanarae
ராஜன் பாலன் பிறந்தனரே தாழ்மையான தரணியிலே
ஆதிபன் பிறந்தார் அமலாதிபன் பிறந்தனரே ஏழ்மையானதொரு மாட்டுக் கொட்டில்தனில் தாழ்மையாய் அவதரித்தார்
1. அன்னை மரியின் கர்ப்பத்திலுதித்தார் அன்பன் ஏழையாய் வந்தார் அவர் மண்ணினில் மானிடரை காக்க வென்றே அவதரித்தார்
2. பாரில் பாவம் போக்கவே பாங்குடன் மானிட ஜென்மம் எடுத்தார் அவர் பாதம் பணிந்திடுவோம் பாலனின் அன்புக்கோர் எல்லையுமுண்டோ மானிட ஜென்மம் எடுத்தார்