ராஜாதி ராஜன் இவர் அல்லேலூயா
raajaadhi raajan ivar alleluya
ராஜாதி ராஜன் இவர் அல்லேலூயா கர்த்தாதி கர்த்தன் இவர் அல்லேலூயா வழுவாது காப்பவராம் அல்லேலூயா மறுவாழ்வு அளிப்பவராம் அல்லேலூயா மகிமை நிறைந்த புனிதர் இயேசு தேவன் இவரே
கிருபை இரக்கம் அளிக்க வந்தவராம் உலகை மீட்கும் இயேசு மாமன்னராம் புதிய ஜீவன் தந்திடவே தேவாதி தேவன் மண்ணில் வந்தார்
கண்ணீ ர் கடலில் மூழ்கி கதறுகையில் கவலை பயத்தால் நானும் வாடுகையில் கரம் நீட்டியே மீட்டுக் கொண்டார் மகனாக என்னையும் ஏற்றுக்கொண்டார்
தாகம் தீர்க்கும் எந்தன் கன்மலையே பாவம் போக்கும் எந்தன் ஜீவ நதி நம்பும் எந்தன் பர்வதமே ஜெயமாக என்றென்றும் நடத்திடுவார