ராஜா வந்தாச்சு
raajaa vandhaacchu
ராஜா வந்தாச்சு வெளிச்சம் வந்தாச்சு நேசரை கொண்டாட நாங்களும் வந்தாச்சி-2
நம்ம பூமி காக்க அருமையான மீட்பர் வந்தாச்சு அந்த தேவ தேவன் நமக்காகவே இறங்கி வந்தாச்சு அந்த வானம் இந்த பூமி அந்த நட்சத்திரம் ஆடி பாட கொண்டாடுவோமே ஹோய்..-ராஜா
1.வெண்ணிலா வெளிச்சத்தில் சுடரொளி பூத்திருச்சு ஊரு சனம் வியக்கவே மீட்பரின் சத்தங்களில் கண்களின் விருந்தாக தூதர்கள் பாடவே விண்ணகம் புகழ்ந்திட கொண்டாட்டம் போடவே உன்னத இடங்களிலே துதியும் மகிமையும் முன்னனை மீதிலே அந்த சிறு பாலகன் புவியின் தெய்வமாய்... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..-ராஜா
2.நீதியின் சூரியனே நிகரில்லா தேவனே பாதைக்கு மார்க்கமே வழிகாட்டும் தேவனே கண்மணி போல் என்னை காக்கும் இரட்சகரே வல்லமை உள்ள தேவன் பேரன்பு கொண்டவரே பெற்றோர் மறந்தாலும் மறந்திடாத தேவனே உன்னதமான இயேசு பரனை விட்டு வந்தார் அதிசய பந்தமாய்... ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..-ராஜா