புயலின் மத்தியில்
puyalin mathiyil
புயலின் மத்தியில் நீர் நின்றிடு என்றீரே நீரே என் சத்துவம் என் நம்பிக்கை நீரே - 2
கடந்த நாட்களில் என்னுடனே இருந்தீர் இன்றும் என் அருகில் கூடவே வந்தீர் வரும் காலங்களிலும் நீர் இருப்பீர் - 2
எழும்பி வரும் புயல்களிலே நீரே எந்தன் கன்மலை பொங்கி வரும் அலைகள்மேலே உம் பாதத்தின் சுவடுகளே
வியாதியின் மத்தியில் நீர் எழும்பு என்றீரே யெகோவா ராஃபா என் சுகம் நீரானீரே - கடந்த நாட்களில்
வியாதியே உன் தலை குனிந்ததே என்மேலே உன் ஆளுகை முடிந்ததே என்னை எதிர்க்க கூடிய எது ஆயுதங்கள் எதுவும் வாய்க்காதே - கடந்த நாட்களில்