புண்ணியர் புதுமையை தேடி
punniyar pudhumaiyai thedi
1. புண்ணியர் புதுமையை தேடி, எண்ணி நான் கவிகளைப் பாடி, மண்ணில் வந்தேன் நாடி, விண்ணை விடுத்தோனைக் கூடி, அண்ணலை ஸ்தோத்தரிப்பேனே கண்ணில் மீட்டு விட்டார்
மகிமை, மகிமை மா ஆ! அருமை! மனுவேலனை என்றும் நானே மனப்பூர்வமாய் துதிப்பேனே!
2. உழையும் சேற்றினில் இறங்கி, அலையும் பாவிகட்கிரங்கி தலையான பாவங்கள் போக்க, தொலையாது கரங்களால் தூக்கி, நிலையாக நிறுத்தின தேவா! அநுதினம் துதித்திடுவேன்.
3. பொங்கு தென் பாத்திரமே மங்களம் சாற்றுவேனே; பங்கம் வராதெனைக் காத்தீர், எங்கும் புகழ்வேன் சாற்றி, மங்கா தெரிவதால் தீபம், துங்கன் பாடுவேன் கீதம்.
4. மேசையா சேவை தானே ஆசை எந்நாளும் கோனே! நேச வெள்ளம் பெருகுது பாச உள்ளம் விரியுதே; தூசி எதைச் செய்குவேனே; நேசரின் பின் செல்வேனே
5. நித்தம், நித்தம், நித்யா, உத்தமர் யாவரும் போற்றி, சுத்த தூதருடன் சேர்ந்து, சுந்தர், சுந்தர் என்று சாற்று, கீர்த்தனை பாடுவது எவ்விதம் ? எத்தனை நாவால் துதிப்பேன்!