புதுப்பட்டு பாடு ஜெபத்தோடு
pudhuppattu paadu jebathodu
புதுப்பாட்டு பாடு ஜெபத்தோடு பாடு பரலோகம் இறங்கிடுமே சந்தோஷத்தோடு கர்த்தருக்காய் பாடு கவலைகள் நீங்கிடுமே
ஆஹா ஹா ... ஆஹா ஹா
பரிமளத் தைலம் வாசனையை வீசும் இயேசு என்னும் நாமம் என்றும் மணம் வீசும் ஒளியாக உயிராக துதியாகினார் நிறைவாக என் வாழ்வில் பெலனாயினார்
நாற்றமுள்ள வாழ்க்கை நறுமணமாகும் அக்கிரமம் நீங்கி பசும் பொன்னாய் மாறும் புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றிடுவார் கனியுள்ள வாழ்க்கையாய் மாற்றிடுவார்
காரிருள் சூழ்ந்தும் பயம் ஒன்றும் இல்லை நெறிந்த என் வாழ்வு முறிவதுமில்லை அவர் நாம மகிமைக்காக உயர்த்திடுவார் களிமண் நான் அவர் நாமம் உயத்திடுவேன்
பெயர் சொல்லி அழைத்தார் கரத்தினால் அணைத்தார் அக்கினியின் ஜூவாலை அழிக்காது காத்தார் தண்ணீரைக் கடந்தாலும் என்னைத் தூக்கினார் கண்ணீரில் நனைந்தாலும் என்னைத் தாங்கினார்