புதுப்பாடலால் புண்ணியரை
pudhuppaadalaal punniyarai
புதுப்பாடலால் புண்ணியரை போற்றிடுவேன் புகழ்ந்திடுவேன் நரம்பு வீணை மீட்டி மீட்டி நடனமாடியே மகிழ்ந்திடுவேன் - பத்து
அற்புதமே அவர் நாமம் அதிசயமே அவர் நாதம் அல்லேலூயா அவர் கீதம்
தாயின் மேலாய் நேசித்தாரே தந்தையைப் போல் போஷித்தாரே தேவ அன்பால் நிறைந்து நானும்
தேவாதி தேவனைத் துதித்திடுவேன் - என்றும் நெரிந்த நாணல் முறிந்திடாமல் மங்கிய திரியை அணைத்திடாமல் எண்ணெய் ஊற்றி என்னை மாற்றி புதிதான அபிஷேகம் தந்திட்டாரே - தூய
சீக்கிரமாய் வந்திடுவார் கண்டிடுவேன் நான் களித்திடுவேன் நேச மார்பில் சாய்ந்து என்றும் ஒளிமய தேசத்தில் சுகித்திருப்பேன் - அவர்