புதுமை தேவகுமாரன்
pudhumai devagumaaran
புதுமை தேவகுமாரன் பிறந்தார் பெத்லகேம் பாலன் புல்லணைமீதே தவழ்ந்தாரே
தூதர் நற்செய்தி சாற்றிடவே தேடிச் சென்றனரே ஓர் கூட்டம் காத்திருந்த நல் மேய்ப்பர் அன்றே கண்ட காட்சியிதே
ஆயர்குடியில் அன்புருவம் ஆண்டவர் பிறந்தார் மாவிந்தை வான சாஸ்திரிகளும் பணிந்தே வணங்கும் தாழ்மையிதே
மாந்தர்கள் அன்று காரிருளில் மாபெரும் வெளிச்சம் கண்டார்கள் மங்கிடாமனஜோதி இயேசு மகிமை சாட்சியிதே
பண்புமிகும் இப்பாலகனே பள்ளத்தாக்கின்மலர் லீலிப்பூ தம்மைப் பின்பற்றியே நடப்போர் துதிக்கும் கானமிதே
தேவ பிதாவைச் சேர்வதற்கே ஜீவமார்க்கம் இவர் கிறிஸ்து முன்னணை முதல் கொல்கொதாவறை துன்பப் பாதையிதே
விண்விடிவெள்ளி பாலகனே மண்ணுலகில் உதித்தார் மீண்டும் மின்னலைப்போல் வருவார் மன்னன் வாக்க்குமிதே