புது வருடம் அதில் புது
pudhu varudam adhil pudhu
புது வருடம் அதில் புது கிருபை பூரண ஆசீர் பொழிந்திடுமே புதியன காரியம் செய்திடுவேன் நான் பற்பல அதிசயம் காணச் செய்வேன்
கீழாக்காமல் மேலாக்குவேன் வாலாக்காமல் தலையாக்குவேன் எல்லையை பெரிதாகவேன் நன்மையால் நிரப்பிடுவேன்
சத்துருக்களை மேற்கொள்வாய் நம்பிக்கையால் வாழ்வு பெருவாய் உன் கரம் பிடித்து நடத்திடுவேன் ஆத்துமாவை தேற்றிடுவேன்
தேவையை நிறைவேற்றுவேன் பெலன் தந்து பலப்படுத்துவேன் இன்று முதல் ஆசீர்வதிப்பேன் நீயும் ஆசீர்வாதமாய் இருப்பாய்