புது பிறப்பெடுத்ததால்
pudhu pirappeduthadhaal
புது பிறப்பெடுத்ததால் என்னை தரை மட்டும் தாழ்த்துகிறேன் உமக்குள்ளே நுழைவதால் உம்மை உயிரென ஏற்கிறேன் (2)
இயேசுவே எனை மாற்றுமே ஒளி வண்ணமாய் என்னை தீட்டுமே (2)
பரிசுத்த ஜீவனாய் என்னை பெலப்பட செய்யுமே உம் வசனத்தின் வழிப்படி என்னை வாழ்ந்திட வாழ்த்துமே (2)
இயேசுவே இறங்கி வாருமே ஆசீர்வாதத்தை அன்பாய் தாருமே (2)
இருளுள்ள உள்ளங்கள் இங்கு வெளிச்சமாய் ஒளிரட்டும் தவறுள்ள எண்ணங்கள் இங்கு தரைப்பட்டு ஒழியட்டும் (2)
கவலைகள் துயரங்கள் காணாமலே போகட்டும் மகிழ்ச்சிகள் நிறைவுகள் மின்னும் மலர்களாய் மலரட்டும் (2)
இயேசுவே உம்மை போற்றுவோம் விசுவாசமாய் தினம் வாழுவோம்(2)