புது நவ ஆண்டதைக் கண்டோம்
pudhu nava aandadhaik kandom
புது நவ ஆண்டதைக் கண்டோம் - எங்கள் புண்ணியர் யேசுவின் கிருபையினாலே.
இதுவரை எங்களை இரக்கமாய்க் காத்த இம்மானுவேல் ராஜா என்றென்றும் வாழ்க.
1. ஆவியில் மறுபிறப்படைய எங்கள் ஆத்துமா முழுவதும் புதுப் பெலனடைய மேவியுன் இரக்கத்தை எங்கள் மேல் வைத்து வேதாளத்தை வெல்ல ஆயுதங் தாரும்.
2. கையிட்டுச் செய்கிற வேலை - எல்லாம் கர்த்தா நீர் ஆசீர்வதித்திட வேணும் பொய் மார்க்கம் ஒழிந்திட மெய்யான வேதம் புதுப் பெலன் பெற்றெங்கும் வளர்ந்தோங்கச் செய்யும்.
3. வருகிற ஆபத்து விலக - நாங்கள் மகிமைக்கு நாட்டின விருட்சங்களாக உருகி ஜெபித்தும்மை ஓயாமல் போற்ற உன்னத ஆவியின் அருள் தந்து காரும்.
4. பஞ்சம் பசியணுகாமல் - இன்னும் யுத்தங்கள் தோன்றி துன்பம் வராமல் தஞ்சம் அடைந்தும்மை சரணமென் றேற்ற தயவு செய்தருளுவீர் அருள் மறை வேதா.