புது நாட்கள் உன் முன்னே வைத்தேனே
pudhu naatkal un munne vaithenae
புது நாட்கள் உன் முன்னே வைத்தேனே மகிழ்ந்து நன்றி சொல்லு புது வருஷத்தை உனக்கு தந்தேனே மகிழ்ந்து நன்றி சொல்லு -2
உன்னைக் கீர்த்தி புகழ்ச்சியாய் வைப்பேனே உன் துக்க நாட்கள் முடிந்திடும் -2 நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் உன் சுகவாழ்வு துளிற்க்கும் -2
1. வெட்கத்திற்கு பதிலாய் இரட்டதனை பலனை தந்து ஆசீர்வதிப்பேன் சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம் தந்து உயர்த்தியே ஆசீர்வதிப்பேன் -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே
2. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் என் கிருபை விலகாது தண்ணீரைக் கடந்தாலும் அக்கினியில் நடந்தாலும் உன்னோடு கூட இருப்பேன் -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே
3. எகிப்து தேசத்தில் நடந்தது போல் உன்னை அதிசயம் காணச் செய்வேன் திறந்த வாசலை உனக்கு முன் வைப்பேன் பூட்டவே முடியாதே -2 நான் செய்வதை தடுப்பவர் இல்லை நினைத்ததை நிறுத்துவார் இல்லை -2 சொன்னதை செய் செய்யும் தேவன் நானே