புது கிருபை அளித்திடுமே
pudhu kirubai alithidumae
புது கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில் கிருபை மேல் கிருபை அருளிச் செய்தது கிருபையில் பூரணமாக செய்யும்
ஆத்துமமே என் முழு உள்ளமே ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பேன் தினம் அதிகாலையில் புது கிருபை அளித்து நீர் வழி நடத்தும்
2. கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த கிருபையின் பாத்திரமாக்கிடுமே கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே கிருபைகள் ஈந்திடும்
3.சோதனை வியாதி நேரங்களில் தாங்கிட உமது கிருபை தாரும் கிருபையில் என்றும் பெலனடைந்து கிறிஸ்துவில் வளரச் செய்யும்
4. சோர்ந்திடாமல் நல சேவை செய்ய கிருபையின் ஆவியை ஊற்றிடுமே நல்ல போராட்டத்தைப் போராடு கிருபைகள் அளித்திடுமே
5. பக்தியோடு நம் தேவனை பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே கிருபையைக் காத்துக்கொள்வேன்