புதிய வல்லமை புதிய அபிஷேகம்
pudhiya vallamai pudhiya abishegam
புதிய வல்லமை புதிய அபிஷேகம் புதிய ஆவி எங்கள் மேலே இந்த நாளில் இறங்கட்டுமே-2
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே பலமாய் இறங்கி வாரும் சாத்தானின் கோட்டையை தகர்த்தெரிந்திட பலத்தை எனக்குத் தாரும்-2
1. கேயாசி கண்களைத் திறந்து வைத்து அக்கினி இரதங்களை காணச் செய்தீர்-2 (எங்கள்) ஆவியின் கண்களைத் திறந்திடும் உம் மகிமையை தரிசிக்கவே-2-மேக ஸ்தம்பமே
2. எரிகோவின் கோட்டையை உடைத்திட யோசுவாவை நீர் தெரிந்து கொண்டீர்-2 (எங்கள்) தேசத்தின் கட்டுகளை உடைத்திட உம் ஆவியால் நிரப்பிடுமே-2-மேக ஸ்தம்பமே