புதிய பாதையை திறந்திட
pudhiya paadhaiyai thirandhida
புதிய பாதையை திறந்திட இறங்கி வந்தவரே கிரகிக்ககூடாத அற்புதங்கள் வாழ்நாளில் செய்தவரே (2)
ஆச்சர்யமான உம் செய்கைகளை என் காலத்தின் விசேஷமாக்கினீரே (2)
பல்லவி
மக்னாயி(ஹி)மே (2) கர்த்தரின் சேனைகள் எழுந்திடு மக்னாயி(ஹி)மே (2) சேனையின் கர்த்தரை உயர்த்திடு
எதிரியின் பாளையத்தை கொள்ளையிட கையில் கொடுத்தீரே சத்துருவின் திட்டங்களை முறித்திட பெலன் அளித்தீரே (2)
இரச்சிக்க கூடாத(இயலாத) எல்லைகளை விடுவிக்கும் அதிகாரம் தந்தவரே (2)
பல்லவி
மக்னாயி(ஹி)மே (2) கர்த்தரின் சேனைகள் எழுந்திடு மக்னாயி(ஹி)மே (2) சேனையின் கர்த்தரை உயர்த்திடு
2. எகிப்திய சேனைகளை தண்ணீரிலே மூழ்கடித்தீரே தடைகளாய் நின்றதெல்லாம் முற்றிலுமாக நீக்கினீரே (2)
இம்மட்டும் தொடர்ந்து வந்தவனை தேடியும் காணாமல் ஆக்கினீரே (2)
பல்லவி
மக்னாயி(ஹி)மே (2) கர்த்தரின் சேனைகள் எழுந்திடு மக்னாயி(ஹி)மே (2) சேனையின் கர்த்தரை உயர்த்திடு