புதிய பாடல் என் இதயத்தில்
pudhiya paadal en idhayathil
புதிய பாடல் என் இதயத்தில் தொனிக்குதே புதிய வரிகள் எனக்குள் துளிர்க்குதே-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2
ஓ ஓ ஓ ஓ உம்மை துதிப்பேன் ஓ ஓ ஓ ஓ நான் உம்மை துதிப்பேன்
நம்பிக்கை உடைய சிறைகளே கரம் உயர்த்தி பாடுங்கள் அதிசயம் அற்புதம் செய்பவர் நம் நடுவில் இருக்கின்றார்-2
அழைத்தவர் என் கரத்தை கைவிடவில்லை உன் வாழ்க்கையே அவர் கரத்தில் சந்தேகமில்லை-2 இரவில் அழுதால் பகலில் சிரிப்பேன் சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவீர்-2
தோல்வியை சந்தித்த உள்ளமே நீ மகிழ்ந்து களிகூரு தீமையை அனைத்தையும் மாற்றுவார் அவர் கரத்தில் தங்குவார்-2
பறவைபோல் நீ பறந்திடு புது பெலத்தோடு எழும்பிடு உன் மனதிலே உள்ள பாரங்கள் அவர் பாதத்தில் இரக்கிடு இரவில் அழுதால் பகலில் சிரிப்போம் (சிரிப்பாய்) சாம்பல் பதிலாய் சிங்காரம் தருவார்-2