புதிய கிருபை அளித்திடுமே
pudhiya kirubai alithidumae
புதிய கிருபை அளித்திடுமே அனுதின ஜீவியத்தில் கிருபை மேல் கிருபை அருளி செய்து கிருபையில் பூாணமாக செய்யும்
ஆத்துமாவே என் முழு உள்ளமே ஆண்டவரை நீ ஸ்தோத்தரிப்பேன் தினம் அதிகாலையில் புது கிருபை அளித்து நீர் வழி நடத்தும்
கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்த கிருபையின் பாத்திரமாக்கிடுமே கிருபையினால் உள்ளம் ஸ்திரப்படவே கிருபைகள் ஈந்திடும்
சோதனை வியாதி நேரங்களில் தாங்கிட உமது கிருபை தாரும் கிருபையை என்றும் பெலன் அடைந்து கிறிஸ்துவில் வளரச் செய்யும்
சோர்ந்திடாமல் நல சேவை செய்ய கிருபையின் ஆவியை ஊற்றிடுமே நல்ல போராட்டத்தைப் போராடு கிருபைகள் அளித்திடுமே
பக்தியோடு நம் தேவனை பயத்துடனே நிதம் தொழுதிடுவோம் அசைவில்லா ராஜ்ஜியம் அடைந்திடவே மகிருபையை காத்துக் கொள்வோம்