புதிய கிருபை
pudhiya kirubai
புதிய கிருபை புதிய கிருபை புதிய கிருபையை ஈந்தாய் எந்தாய் புதிய கிருபையை ஈந்தாய்
புதுமையாய் எம்மை புதுப்பியும் நாதா கதியே கதிநீர் தான் தேவா பரிசுத்தமா மலங்காரத்துடனே தரிசிக்க தயைசெய் நாதா
அன்பரே உம்மை அனுதினம் போற்ற நண்பரே நான் இனி மறவேனே துன்பம் நிறைந்த பாரினில் பரனே இன்பம் நீர் ஒன்றேதான் அன்றோ
சாத்தானை ஜெயிக்க சக்தியருள்வாய் சுதன் யான் நின் சித்தம் செய்வாய் சத்திய பரனே நித்திய குருவே சுத்தர்க்கு அருள் தரும் தருவே
எக்காளம் தொனிக்கையில் யேகபரனே, அக்களிப்புடன் ஆகாய மீதினில் துக்கங்கள் ஒழிய தூயா உம்முடனே தூய்மையாய் விரைவேன் நானன்றோ
எங்கும் நிறைந்த ஜோதி பிதாவே துங்கவரே எம் மங்களனே மகிமையாக நான் மகிழ்ந்து ஜொலிக்க மன்னா நீர் வந்தாசி தாரும்