போய் சுதந்தரிப்போம் நாம்
poy sudhandharippom naam
போய் சுதந்தரிப்போம் நாம் கர்த்தர் வாக்கு பண்ணினா போய் சுதந்தரிப்போம்
கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசைகள் எங்கும் சுற்றிடுவோம் நன்மை செய்த இயேசு போல நானிலம் எங்கும் சென்றிடுவோம்
சேனைகளின் கர்த்தர் தேவன் நம்மோடென்றும் இருக்கின்றார் சேதம் ஏதும் அணுகிடாமல் தேசம் அடைய செய்திடுவார்
என்னை கேளும் ஜாதிகளை சுதந்திரமாய் தருவேன் என்றார் பூமியின் எல்லைகளையும் சொந்தமாக கொடுத்திடுவார்
கால்கள் வைக்கும் தேசத்தையே சுதந்திரமாய் தருவேன் என்றார் ஆயத்தமாம் பாதரட்சை அணிந்தே இன்றே புறப்படுவோம்
கர்த்தர் நமது சுதந்திரமே பாத்திரத்தின் பங்கானவர் நமது தேவன் சுதந்திரத்தை காத்து நமக்கு தந்திடுவார்