போற்றுவேன் இயேசு இராஜனே
potruven yesu iraajanae
போற்றுவேன் இயேசு இராஜனே ஆத்ம நேசரே ஏற்றிப் புகழ் பாடி எந்தன் ஆவல் தீரத்திட போற்றுவேன் இன்ப இராஜனே
1.என் இயேசு தேவா எனை மீட்ட நாதா அன்பே விண்சொரூபா ஆட்கொண்ட அரூபா ஏற்றுவேன் என் உள்ளமதினால்-துதி சாற்றி என் நேரன்பைப் பேற்றிடுவேன் நான்-நிதம்
2.ஆழக்குழியில் அமிழ்ந்திடும் வேளை மீழ இவ்வேழை மீதன்பு கொண்டீரே என் செய்வேன் என் அன்பரேசுவே-பிரிய அன்பே யேழை எண்ணி ஏற்றிப் போற்றுவேன்
3.உன்னத வீட்டை மன்னா நீர் ஈய என்ன இக்கோலம் அண்ணல் எடுத்தீரே நன்றியாலே போற்றிடுவேன் நான்-உமை மன்னா உந்தன் அன்பால் காதல் கொள்ளுதே-உள்ளம்
4.வானினம் போற்றும் வானவர் சேயே மானிலம் பூண்டீர் மன்னவர் சாயலே உன்னதா உம் சாயலணிய-திரு மின்னல் வேகமதாய் வந்திடுவீரே-வானில்
5.இப்பூவில் நீரே இன்ப மணாளன் எப்போ வருவீர் என் ஆவல் தீர்த்திட வாழ்க வாழ்க நித்ய காந்தனே- எந்தன் வாழ்த்தி யுகாயுகமாய்ப் பாடிடுவேன் நான்-கவி