போற்றுவேன் என் மீட்பர் அன்பை
potruven en meetpar anbai
1. போற்றுவேன் என் மீட்பர் அன்பை! ப்ராணன் தந்து ரட்சித்தார். பாடுபட்டு ரத்தம் சிந்தி பாவம் சாபம் நீக்கனார். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார்.
2. நீசப்பாவி எந்தன் பேரில் நேசம் வைத்துக் காட்டினார். மீட்கும் பொருளாகத் தம்மை முற்றும் தந்தீடேற்றினார். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார்.
3. போற்றுவேன் சம்பூர்ண மீட்பை! நேச நாதர் காக்கிறார். வாழ்நாள் எல்லாம் பாவத்தின் மேல் வெற்றி காணச் செய்கிறார்! போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார்.
4. போற்றுவேன் ஆனந்தமாகப் பாடி நன்றி சொல்லுவேன். என்னை மீட்ட யேசுவோடே என்றும் தங்கி சேவிப்பேன். போற்றும்! போற்றும்! ! அல்லேலூயா! பூர்ண மீட்புண்டாக்கினார் தூய வல்ல ரத்தம் சிந்தி தீய பாவம் நீக்கினார்.