போற்றிப்பாடியே என் மீட்பர் பின் செல்வேன்
potrippaadiyae en meetpar pin selven
போற்றிப்பாடியே என் மீட்பர் பின் செல்வேன் தாழ்ச்சி அடையேன் என்றுமே பாடி துதிப்பேன் என் நேசர் நாமத்தை எனக்கொன்றும் குறைவில்லையே
மேய்ப்பனின் கையில் ஆட்டினை போல் அனுதினம் நான் பின் செல்வேனே இயேசுவின் பாதம் போற்றியே நானும் துதிபாடுவேன் என்றென்றுமே
பள்ளத்தாக்கிலே நான் நடந்திட்டாலும் அவர் முகம் நோக்கி பின்செல்வேன் பொல்லா வினைகள் என்னை வந்து சூழ்ந்தாலும் பயம் இல்லை எனக்கென்றுமே
துன்ப நேரத்தில் நான் வருந்திட்டாலும் அவர் கோலும் தடியும் தேற்றிடும் ஆயுள் முழுதும் எந்தனின் பாத்திரம் அவர் அருளாலே நிறைந்திடுமே