போற்றிப் பாடுவேன் உம்மை
potrip paaduven ummai
போற்றிப் பாடுவேன் உம்மை மகிமை நிறைந்தவர் நீரே உயர்த்தி பாடுவேன் உம்மை எங்கள் இராஜாதி இராஜனே எங்கள் தேவாதி தேவனே
ஆராதிப்போம் உம் நாமத்தை உயர்த்துவோம் உம் மேன்மையை-2
1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர் உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2 உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன் மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே
2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர் மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2 உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் துதிப்பேன் எங்கள் யேகோவா தேவனே
3.உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா-2 என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம் உம் சேவை செய்திடுவோம்-என்றும் உம்மண்டை சேர்ந்திடுவோம்