போற்றிடுவோம் துதித்திடுவோம்
potriduvom thudhithiduvom
போற்றிடுவோம் துதித்திடுவோம் சேனையின் தேவனே பாடி மகிழ்வோம் -2 பாடிடுவோம் கொண்டாடுவோம் அல்லேலூயா துதி அவர்க்கே -2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2
கடந்திட்ட நாள்களில் நம்மை காத்தவர் புதியதோர் நாளையும் நமக்கு தந்தார் -2 யுத்தங்கள் வெள்ளங்கள் பூகம்பம் வந்தாலும் தேவன் நம்மை காத்துக் கொண்டார் -2
மேய்ப்பராய் நம்மையும் நடத்திவந்தார் வாழ்வையும் நன்மையால் நிரம்ப செய்தார் -2 நமக்காக சிலுவையில் ரத்தமும் சிந்தி மே தேவன் நம்மை மீட்டுக் கொண்டார் -2
நம்மையும் அவரிடம் ஒப்புக் கொடுப்போம் உலகத்தின் ஆசைகள் விட்டுவிடுவோம் -2 அவரோடு பரலோக வாழ்வினில் நாமும் என்றென்றும் வாழ்ந்திடுவோம் -2