போற்றிடுவோம் போற்றிடுவோம்
potriduvom potriduvom
போற்றிடுவோம், போற்றிடுவோம் எங்கள் அண்ணலாம் இயேசுவை நாம் போற்றிடுவோம், போற்றிடுவோம் எங்கள் இயேசுவை நாம்
1. இன்பமளித்தாரே - ஓயாததோர் துய்யா, துய்யா, துய்யா உள்ளமதில் கனிந்து பணிந்து துதிகள் சாற்றிடுவோம் - போற்
2. துன்பம் தொலைத்திடா - பாதைகளில் தெம்மை, எம்மை, எம்மை அன்பாலனுகிக் கானகந்தனில் அரண் அளித்திட்டாரே - போற்
3. பாதையினிருளில் - நெருங்கிடும் கிருபை, கிருபை, கிருபை தந்து தழுவி அருகிலிருந்து அருள் சொரிந்திட்டீரே - போற்
4. அன்பின் ரூபி - முழுவதும் அன்பே, அன்பே, அன்பே அந்நியமான என் உள்ளத்தில் அன்பையே நிறையச் செய்தீரே - போற்
5. தாங்கிடும் கரம் - அடியாரை எங்கும், எங்கும், எங்கும் அங்கங்கும் ஓங்கி எங்களை காத்ததால் துங்கனைப் போற்றிடுவோம் - போற்