போற்றிடுவோம் போற்றிடுவோம்
potriduvom potriduvom
போற்றிடுவோம் போற்றிடுவோம் எங்கள் இரட்சகனே வாழ்த்திடுவோம் வாழ்த்திடுவோம் நம்மை மீட்டவரை
1. பாவ வேடம் பூண்டு வந்த பரலோக நாதனைப் பாகற்காய் ஜீவன் விட்ட பரிசுத்த ராஜனை
2. பாவ வினை தீர்க்கவென்று பாரில் வந்தவரைப் பாக்களாலும் நாதத்தாலும் ஏற்றிப் போற்றுவோமே
3. ஜீவ நதி ஒழுகுகின்ற ஜீவ நாயகனை ஜீவ நதி தனில் மூழ்கித் தரிசிப்போம்
4. சுத்த ஜலம் கொண்டு நம்மை சுத்திகரித்தோனைச் சுத்தப் கைகளை உயர்த்தி ஸ்தோத்திரிப்பேன்
5. வாக்குத்தத்த ஆவியின் வல்லமை அளித்தோனை வானசேனையோடு சேர்த்து வாழ்த்திப் போற்றுவோம்
6. பரிசுத்தவான்களின் பரலோக வைத்யன் பரிசுத்த சபையில் பாடித் துதிப்போம்
7. சரீர சுகங்கட்கெல்லாம் சக்தியளித்தோனைச் சர்வ நாளும் சாட்சியாக நின்றிலங்குவோனை
8. நீதியென்னும் பரிசுத்த ஆடையளித்தோனை நித்திய விவேகத்திற்காக நியமித்தான்
9. சுத்த பிரகாசமான ஆடையளித்தோனை சித்திரத் தையலாடையுடன் கெம்பீரிப்போமே
10. நினையாத நேரத்தில் வந்திடுவேன் என்றான் நித்தமும் ஜெபத்துடன் விழித்து நோக்குவோம்
11. பரலோக ராஜ்ஜியத்திற்காய் அழைக்க வந்தோரை அழைக்கப்பட்டோர் பாக்கியர் என்றார்ப்பரிப்போமே