போற்றிடுவேன் என் இயேசுவையே
potriduven en yesuvaiyae
போற்றிடுவேன் என் இயேசுவையே புகழ்ந்து பாடிடுவேன் இதயத்தின் தெய்வமாம் இயேசு என் வாழ்க்கையின் ஆரம்பம் இயேசு
மனுவாக வந்தவர் இயேசு மன பாரங்களை நீக்குவார் இயேசு ஜீவனின் அதிபதி இயேசு பரிசுத்தம் அளிப்பார் இயேசு
தம்மிடம் வருவோரை இயேசு தயங்காமல் அணைப்பவர் இயேசு மறுவாழ்வு அளிப்பவர் இயேசு மகிமையில் சேர்ப்பவர் இயேசு
சமாதானம் நல்கிடும் இயேசு மன மகிழ்ச்சிக்கு காரணம் இயேசு சாந்தியும் அளிப்பவர் இயேசு வாழ்வுக்கு துணையாவார் இயேசு