போற்றிடுங்கள் சாற்றிடுங்கள்
potridungal saatridungal
போற்றிடுங்கள் சாற்றிடுங்கள் தேவசுதனை ஓயாமல் எங்கள் நாயகனை
1. சர்வத்தையும் படைத்தோன் சர்வ வல்லவர் சாவும் பேயும் நோயையும் ஜெயித்தார் - ஜெயித்தார் பாடுங்கள் ஏத்துங்கள் நேசரையே இன்றுமென்றுமே ஓயாமல் எங்கள் நாயகனே - போற்றி
2. இன்று வரை எம்மில் அன்பைச் சொரிந்தார். இன்னல் துன்பம் கன்மமும் போக்கி - போக்கி ஜீவன் சுகம் பெலன் தந்து எம்மை காத்து போஷித்தார் இயேசு இன்றும் துதிப்போம் - போற்றி
3. சஞ்சலங்கள் மத்தியில் தஞ்சமானவர் நெஞ்சமும் அஞ்சிடா கெஞ்சுதல் கேட்டார் - கேட்டார் என்றென்றும் ஏத்துவோம் தேவ நாமம் எங்குமோங்கவே எப்போதும் இயேசு ஜெயித்தார் - போற்
4. ஜீவ வாசல் திறந்தார் நேசர் எமக்காய் இன்பமும் கீதமும் அகமது அளித்தார் - அளித்தார் இன்று மே பாடுவோம் எங்களுக்காய் மாண்ட பரனை எப்போதும் நன்றியுடையவராக - போற்
5. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் துதியுங்கள் துதியுங்கள் துதியுங்கள் பரனை - பரனை பூலோகமே உங்கள் உன்னதனை உண்மையுடனே தோத்திர பாத்திரனவரே - போர்