போராடு போராடு நீயும்
poraadu poraadu neeyum
போராடு போராடு நீயும் வெற்றி பெற போராடு -2 அம்சத்தோடு அல்ல உனக்கு இன்று போராட்டம் இரத்தத்தோடும் அல்ல உனக்கு என்றும் போராட்டம் -2 துரைத்தனத்தோடு உனக்கு உண்டு போராட்டம் -2 அதிகார வர்க்கத்தோடு என்றும் போராட்டம் -2
வான மண்டல பொல்லாத சேனைகளோடும் அந்தகார லோகாதிபதிகளோடும் -2 எதிர்த்து நிற்க ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் -2 தேவனுடைய ஆயுதத்தை தரித்து நில்லுங்கள் -2
சத்தியம் என்னும் கட்சையை அறையில் கட்டுங்கள் நீதி என்னும் மார்க்கவசம் அணிந்து கொள்ளுங்கள் -2 சமாதான சுவிசேஷ பாதரட்சையை -2 கால்களிலே நீங்களும் தரித்துக்கொள்ளுங்கள் -2
பொல்லாங்கான் ஏய்யும் அக்கினி அஸ்திரங்களை அளித்து போட விசுவாச கேடயம் உண்டு -2 இரட்சணியதை தலை சீராவாய் அணிந்து கொள்ளுங்கள் -2 தேவ வசனம் ஆகிய பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் -2