பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
poovin narkandham veesum solaiyaayinum
பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும் நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும் இயேசு நாதர் பின் சென்றேகி மோட்சம் நாடுவேன்-விண்ணில் சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன் பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
கார்மேகம் மேலே மூடும் பள்ளமெங்கிலும் காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும் இயேசு பாதை காட்ட சற்றும் அஞ்சவே மாட்டேன்-இரட்சகர் கை தாங்க தைரியம் கொள்ளுவேன்
நாள்தோறும் இயேசுவை நான் கிட்டிசேருவேன் மேடானாலும் காடானாலும் பின்னே செல்லுவேன்-மீட்பர் என்னை மோசமின்றி சுகமே காப்பார் விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்
பின் சென்று நான் அங்கவரை சந்திப்பேன் அவர் அன்பாய் இவ்வேழையை அணைப்பாரே-வானோரோடு சேனையுடன் தங்க செய்குவார் அங்கே துதிகீதம்பாடி வாழுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F A# F F G C F F7 A# F F C F F A# F F Gm C F A# F Dm C F F A# F G C F A# F Dm C F F A# F G C F F A# F Dm C F F A# F G C F F A# F Dm C F