பூவில் நான் என் ஓட்டம்
poovil naan en ottam
பூவில் நான் என் ஓட்டம் முடித்து விண்ணில் என் வெகு மதிக்காய் பறந்திடுவேன் மறுரூபமாய் பரன் இயேசு ராஜன் சமூகம்
தூதர் சேனை யாவுமே அணி அணியாய் என்னை வரவேற்க நிற்கின்றசூத வெள்ளையங்கி தரித்து எந்தன் நேசர் முன்பாக அல்லேலூயா பாடுவேன்
1. வெகுநாளாய் காண ஆவலாய் காத்திருந்த எந்தன் நேசரை மகிமையிலே காணும் வேளையிலே திருமார்பில் சாய்ந்திடுவேன்
2. நித்திய கை வேலையில்லாத புது சாலேம் நகரமதில் மணவாட்டியாய் சதாகாலமாய் பரமனோடு என்றும் வாழுவேன்