பூர்வ பிரமாணத்தை
poorva piramaanathai
1. பூர்வ பிரமாணத்தை அகற்றி, நாதனார் சிறந்த புது ஏற்பாட்டை பக்தர்க்கு ஈகிறார்.
2. ஜோதியில் ஜோதியாம் மாசற்ற பாலனார், பூலோகப் பாவத்தால் உண்டாம் நிந்தை சுமக்கிறார்.
3. தம் பாலிய மாம்சத்தில் கூர் நோவுணர்கிறார்; தாம் பலியென்று ரத்தத்தில் முத்திரை பெறுகிறார்.
4. தெய்வீக பாலனே, இயேசு என்றுமே நீர் மெய் மீட்பராய் இந்நாளிலே சீர் நாமம் ஏற்கிறீர்.
5. அநாதி மைந்தனாய், விண் மாட்சிமையில் நீர் பிதா நல்லாவியோடொன்றாய் புகழ்ச்சி பெறுவீர்.