பூரணமிகு சோபையுற்ற
pooranamigu sobaiyutra
பூரணமிகு சோபையுற்ற புது எருசலேமே பூவில் அகிலம் ஆதிப்பலனாய் மீட்கப்பட்டவளே பூரணரவர்க்கே மணவாட்டியானவளே.
வல்ல தேவனினேக திருசெல்வ சுதனுக்கே - ஏது சொல்லிலும் நிறையாத அலங்கார மேற்றனையே கன்னிகரில்லா அன்பே அருணாகக் கொண்டனையே என்ன இன்பம் ஜோதி நீதி நிறைந்த நகரம்
2. யாருமில்லையே நேசர் நல்ல இயேசு ஒருவரே - அவர் ஆய உதிரம் தானே உனைக் கொண்ட கிரகம் மாய உலகினின்று மணந்தார் சொந்தமாய் காயம் யாவும் நேயர் அன்பின் நித்திய பரிசம்
3. வீரமாய் ஜெயிப்போரே உன்னில் தூயனாய் விளங்கவே-மு தீரமாய் ஜெபிப்போரே அதன் வன்மதிலாகவே அன்பால் ஜீவன் வைத்தோர் அதில் ஆசாரியரே துன்பம் மாறி கண்ணீர் நீங்கும் விண்ணவர் பட்டணம்
4. அஸ்திபாரம் தூய அப்போஸ்தலர் இருக்க - அதில் இயேசு கிறிஸ்து தாமே தகும் மூலைக்கல்லவரே ஆவியானவராலே அமைந்தாலய மிதுவே அன்பு குற்றம் யாவும் அற்ற மாசற்ற கன்னிகையே