பூரண வடிவுள்ள சீயோனிலே
poorana vadivulla seeyonilae
பூரண வடிவுள்ள சீயோனிலே பாரினில் ஜெயங்கொண்ட பரிசுத்தரே ஆர்ப்பரிப்போடு கீதங்கள் பாட ஆனந்தம் பொங்கிடுதே இல்ல
சியோன் சீயோன் சிகரம் சீயோன்தூய்மையின் சிகரம் இல்ல எருசலேம்ஸ்ரம நகரம் இல்ல ஏகுவோம் என்றென்றும் வாழவே
தூய பிதாவின் தேசமதில் நேயர்கள் அவர் முகம் கண்டிடுவார் கண்ணீர்கள் யாவும் தேவனே துடைப்பார் கவலைகள் ஒழிந்திடுமே
பளிங்கு நதியின் இருகரைகளிலே பன்னிரு கனிதரும் விருட்சம் உண்டே பரமனின் அன்பால் நிறைந்தவர் பாடும் பாட்டிற்கோர் இணையில்லையே
கற்புள்ள கன்னிகை கறையற்றவள் கருத்துடன் ஆட்டுக்குட்டியானவரை மகிழ்வுடன் நித்தம் பின் சென்றதாலே மகிபனோடாட்சி செய்வாள்
நகரத்தின் மூலைக்கல் மகிபனேசு தம் நானிலமெங்கும் அவர் ஒளி வீசுதே சீயோனைப் பணித்து தேவ தேவன் சீக்கிரம் வெளிப்படுவார்