பூரண வாழ்க்கையே
poorana vaazhkkaiyae
1. பூரண வாழ்க்கையே! தெய்வாசனம் விட்டு, தாம் வந்த நோக்கம் யாவுமே இதோ முடிந்தது!
2. பிதாவின் சித்தத்தை கோதற முடித்தார்; தொல் வேத உரைப்படியே கஸ்தியைச் சகித்தார்.
3. அவர் படாத் துக்கம் நரர்க்கு இல்லையே; உருகும் அவர் நெஞ்சிலும் நம் துன்பம் பாய்ந்ததே.
4. முள் தைத்த சிரசில் நம் பாவம் சுமந்தார்; நாம் தூயோராகத் தம் நெஞ்சில் நம் ஆக்கினை ஏற்றார்.
5. எங்களை நேசித்தே, எங்களுக்காய் மாண்டீர்; ஆ, சர்வ பாவப் பலியே, எங்கள் சகாயர் நீர்.
6. எத்துன்ப நாளுமே, மா நியாயத்தீர்ப்பிலும் உம் புண்ணியம், தூய மீட்பரே, எங்கள் அடைக்கலம்.
7. இன்னும் உம் கிரியையை எங்களில் செய்திடும்; நீர் அன்பாய் ஈந்த கிருபைக்கே என் அன்பு ஈடாகும்.