பூமியின் குடிகளே பாடுங்கள்
poomiyin kudigalae paadungal
பூமியின் குடிகளே பாடுங்கள் பூலோக மாந்தரே போற்றுங்கள் நமக்கொரு பாலன் பிறந்தார் நமக்கொரு குமரன் கொடுக்கப்பட்டார்
இவர் யார் இவர் யார் இயேசு இரட்சகரே இவர் யார் இவர் யார் பாவநாசகரே
ஈசாயின் அடிமரம் துளிர்த்திடும் யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்திடும் பாவம் நீங்க செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும் இவர் யார் இவர் யார் தீர்க்கன் உரைத்தவரோ இவர்யார் இவர் யார் தாக்கனின் வார்த்தையாமோ
சாத்தானின் தலையதை நசுக்கிட சர்ப்பத்தின் சாபத்தை நீக்கிட சாவை வென்றிடவே சாந்த குமாரன் வந்தார் இவர் யார் இவர் யார் மகத்வ ராஜனாமே இவர் யார் இவர் யார் மகிமையின் தேவனாமே