பூமியின் குடிகளே கர்த்தரை
poomiyin kudigalae kartharai
பூமியின் குடிகளே கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள் நடனமாடி துதித்திடுங்கள்
அல்லேலூயா தேவனே அல்லேலூயாராஜனே அல்லேலூயா ( 4 ) அல்லேலுயா
மகிழ்ச்சியின் தொனியோடெ கர்த்தரை ஆராதித்து ஆனந்தக் களிப்புடனே அவர் சமூகம் வாருங்களேன்
வாசல்களில் துதிகளோடும் ஆலயத்தில் புகழ்ச்சியோடும் அவர் நாமத்தை உயர்த்திடவே ஆர்ப்பரித்து முழங்கிடுவோம்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்னென்றும் நித்தியமாய் அது உன்னை தலைமுறைக்கும் நிச்சயமாய் வழிநடத்தும்