பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும்
poomi adhirndhaalum aazhi ponginaalum
பூமி அதிர்ந்தாலும் ஆழி பொங்கினாலும் என்ன நேரிட்டாலும் அஞ்சிடேன்.
1. யேகோவா துணை நிற்கிறார் அஞ்சிடேன் எக்காலும் அவர் கை விடார் அஞ்சிடேன். - பூமி
2. ஓர் ஜீவ நதியுண்டு பார்! அஞ்சிடேன். அத்தால் சந்தோஷம் செய்கிறார் அஞ்சிடேன். - பூமி
3. நான் உந்தன் தேவன் என்கிறார் அஞ்சிடேன் மாற்றாரை ஓடப் பண்ணுவார் அஞ்சிடேன். - பூமி
4. என் யேசு நாதர் நாமம் ஜெயம்! நம்புவேன். என் யேசு நாதர் நாமம் ஜெயம்! நம்புவேன். யேசு நாமம் ஜெயம் (3) நம்புவேன்.