பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி
poologathin meetpar singaasanam eri
1. பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி செங்கோலும் செலுத்த மெய்யாய் வருகிறார். மெய்த்தாசர் இப்போது இச்செய்தியைக் கூறி பூவெங்கும் ப்ரஸ்தாபிக்கின்றார். ராஜரீகம் செய்வார் செய்வார் வரவே வருவார் அல்லேலூயா (3) ஆமென் அல்லேலூயா ஆமென்.
2. தேசா தேசமாக அந்தந்த ஜனங்கள் ராஜாக்களுங் கூடவே பேரானந்தமாய் ஒரே கூட்டமாக வந்தாராதிப்பார்கள் நல் மீட்பரை வணக்கமாய். ராஜரீகம் செய்வார் செய்வார் வரவே வருவார் அல்லேலூயா (3) ஆமென் அல்லேலூயா ஆமென்.
3. பூலோகத்தார் யாரும் விண்ணோர்களைப் போல மாசற்ற சுத்தாங்கராய்த் தொண்டு செய்வாரே சங்கீதங்கள் பாடி மகா களிப்போடே ஆனந்த கெம்பீரம் கொள்வார். ராஜரீகம் செய்வார் செய்வார் வரவே வருவார் அல்லேலூயா (3) ஆமென் அல்லேலூயா ஆமென்.
4. பூலோத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி செங்கோலும் செலுத்த மெய்யாய் வருகிறார் விண்ணோரும் மண்ணோரும் சங்கீர்த்தனம் கூறி முன் பின் சேiனையாய்ப் பணிவார். ராஜரீகம் செய்வார் செய்வார் வரவே வருவார் அல்லேலூயா (3) ஆமென் அல்லேலூயா ஆமென்.