பூலோகத்தார் எல்லோருக்கும் ஓர்
poologathaar ellorukkum or
1. பூலோகத்தார் எல்லோருக்கும் ஓர் ஜீவ ஊற்றுண்டே எப்பாவ தோஷ குற்றமும் நிர்மூலமாகுமே.
2. மா பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்; பேர் வாழ்வின் வாக்குத் தத்தமும் அப்பாவி அடைந்தான்.
3. அவ்வாறே நானும் யேசுவால் விமோசனம் பெற்றேன் என் பாவத் திகில் நீங்கிற்றால் ஓயாமல் பாடுவேன்.
4. இச்சீவன் நிலையற்றதே என் பாட்டும் அற்பமாம்; என்றாலும் ராஜ்யம் சேரவேசிரேஷ்ட கீதமாம்.
5. உம் திருரத்தம் ரட்சகா! பாய்ந்தோடச் செய்யுமே பூலோக மெங்கும் நாயகா! சுத்தாங்கம் பண்ணுமே.